எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

36

இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரம் திசைக்காட்டிக்கு கிடைத்திருந்தாலும், எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைக்கு வராது என்பதே மக்களின் நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கொடுத்த அதிகாரத்தை கவனமாக பயன்படுத்துவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது எனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு அனுபவம் இல்லையென்றாலும், திருமணத்திற்கு முன் சென்று அனுபவத்தைப் பெறுகிறார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற பழையவற்றின் நல்ல விடயங்களை உள்வாங்கி, தங்கள் கட்சியின் அனுபவமிக்க உறுப்பினர்களால் வழிகாட்டலில், மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.