எதிர்வரும் காலங்களில் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான தனது வாக்கை, பொலன்னறுவை புதிய நகரத்தின் வித்யாலோக பிரிவெனவில் செலுத்தினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. இடைநடுவிலும் கவிழும் சாத்தியம் உள்ளது. அதன் காரணமாக நான் தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை.
எங்களுடைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு மிகச் சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார்.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் நான் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்றும் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.