உக்ரைனின் பாதுகாப்புக்காக பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களுக்கிடையே உடன்படிக்கையொன்றை கையெழுத்திட்டுள்ளன.
பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தலைவர்களான ஜான் ஹீலி மற்றும் ஆஞ்சல் டில்வர் ஆகியோர் இந்த உடன்படிக்கையை லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து கையெழுத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின் படி, இரு நாடுகளும் ஒற்றுமையாக உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இந்த உடன்படிக்கை எடுத்துக்காட்டுவதாக ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 45,000இற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளின் உதவியுடனும் வழங்கப்படவுள்ளன.
Comments are closed.