ரணில் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் எண்ணம்

7

ஜனாதிபதி தேர்தலின் பின்னரான நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணவகம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக நான் நினைத்தேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremsinghe) தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தார்.

அந்த சமயம் அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன.

நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது.

அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது.

அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.