இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தமையே கமலா ஹரீஸின்(Kamala Harris) பின்னடைவுக்கு காரணம் என அமெரிக்க பசுமைக் கட்சியின் தலைவர் ஜீல் ஸ்டெய்ன்(Jill Stein) தெரிவித்துள்ளார்.
சர்வதேசதின் எதிர்பார்ப்பை ஈர்த்துள்ள அமெரிக்க தேர்தல்(US election) நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“ இரண்டு முக்கிய கட்சிகளை விட மிகவும் பின்தங்கியிருக்கின்றோம்.
கமலா ஹரீஸை தேர்தலில் பின்தள்ளிய இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு! | Support For Israel Pushed Kamala Back Us Polls
எனினும், ஆரம்ப முடிவுகளின்படி, ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கைகளுக்க எதிராக மக்களை ஒன்றிணைப்பதில் தாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்.
மக்களை ஏமாற்ற அவர்கள் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. ஜனநாயகக் கட்சியினர் எங்களுக்கு எதிராக ஒரு விளம்பரப் பிரசாரத்தை நடத்தியிருந்தனர்.
எனினும் இந்த முடிவு சமூகத்தின் சக்திக்கு உட்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததால், பல அரேபியர்கள், முஸ்லிம்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்குவாதிகளின் வாக்குகளை ஹரிஸ் இழந்துள்ளார்’’ என்றார்.
Comments are closed.