அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

6

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசியின் விலை தொடர்பில் அரிசி ஆலையாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் (Moneragala) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமைக் காரணமாக, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வழியும் இருக்கவில்லை.

எனவே அரசின் நெல் கையிருப்புகளை விடுவிப்பது அல்லது சட்டங்களை இயற்றுவதன் மூலமோ அரிசி விலையை கட்டுப்படுத்துவது என்பனவே அரசாங்கத்திடம் உள்ள இரண்டு தெரிவுகளாகும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசிடம் நெல் கையிருப்பு இல்லாததால் அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, எதிர்வரும் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Comments are closed.