அநுரவுக்கு ஆதரவு வழங்கும் நாமல்

10

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலி, அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிபட்டுள்ளார்.

முதலீட்டாளர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான பின்னணியை உடனடியாகத் தயாரிக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் சிறப்புரிமைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. நாட்டின் எதிர்காலத்திற்கு இது போதாது.

நாட்டு மக்களின் எதிர்காலம் வளமானதாக அமைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் முன்னெடுக்கும் சரியான வேலைத்திட்டத்திற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.