ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்

5

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்த போதும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுக்கையில் நேற்று (27) நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றின் போது ஹரிணி இதனை குறிப்பிட்டுள்ளார்.

”அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறினாலும், அந்த அமைச்சரவை தீர்மானத்தை மீளாய்வு செய்யும் போது, அது சம்மதத்துடன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது புலனாகிறது.

திறைசேரி மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை

எனவே, இது, தேர்தல் காலத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதி என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது” என கூறியுள்ளார்.

Comments are closed.