இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். நல்ல திரையுலக கலைஞர் என பெயர் எடுத்தது மட்டுமின்றி நல்ல மனிதர் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறார்.
தெலுங்கில் வெளிவந்த ஸ்பீடு டான்சர் படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் தமிழிலும் ஹீரோவாக நடித்து வந்தார், ஆனால், ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் என்றால் அது முனி தான்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர் வெற்றியை கொடுத்து வந்தார். அடுத்ததாக காஞ்சனா 4 படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும், பென்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று ராகவா லாரன்ஸுக்கு 48வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.