வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் GOAT. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
இந்த படம் இவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அனிமல் பட புகழ் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் நடிகை பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற புது அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய் கடந்த 27 – ம் தேதி இந்த கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு முடிந்த நிலையில் மாநாட்டு பணியில் பிஸியாக இருந்ததால் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்தார்.
இந்நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 4 – ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.
Comments are closed.