சூர்யாவின் கங்குவா படத்தின் சென்சார் ரிப்போர்ட்.. ரன் டைம் எவ்வளவு தெரியுமா

10

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமான உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கங்குவா படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது.

இதில் கங்குவா படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மொத்த ரன் டைம் 2 மணிநேரம் 34 நிமிடங்கள் 48 வினாடிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திலிருந்து சில வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.