யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: முக்கிய அறிவிப்பு

4

கொழும்பு (Colombo) கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் (Jaffna) பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

வடக்கு தொடருந்து பாதையில் தினமும் தொடருந்து பயணிக்கும் என்றும், தொடருந்து கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் தொடருந்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடருந்து நேர அட்டவணைக்கு அமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் தொடருந்து இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் தொடருந்து இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் தொடருந்து இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும். மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் தொடருந்து இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.