கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் அண்மையில் மொத்த விற்பனை விலையை அறிவித்தது.
அதன்படி, சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விலை 36 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 35 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது நாளொன்றுக்கு தேவையான முட்டை உற்பத்தி 85,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.