வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகும் வேலாயுதம் – 7ஆம் அறிவு.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

8

ஒரே நாளில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது என்பது சகஜம் தான். ரஜினிகாந்த் – கமல், அஜித் – விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளது.

அப்படி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் விஜய்யின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் 7ஆம் அறிவு படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது.

மக்கள் மத்தியில் முன்னணி ஹீரோக்களாக கொண்டாடப்பட்டு வரும் இவர்கள் இருவருடைய படமும் ஒரே நாளில் வெளிவந்த நிலையில், இரண்டு படங்களையும் தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

வேலாயுதம் மற்றும் 7ஆம் அறிவு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

7ஆம் அறிவு திரைப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த படமாகும். உலகளவில் கொண்டாடப்பட்ட இப்படம் ரூ. 103 கோடி வசூல் செய்தது. இதுவே சூர்யாவின் முதல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் ஆகும்.

விஜய் முதல் முறையாக சூப்பர் ஹீரோ என்கிற கான்சப்டில் நடித்த வேலாயுதம் திரைப்படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இதுதான் விஜய்யின் முதல் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.