அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

7

சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4 இப்படத்தில் இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.

2024 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படமாக அரண்மனை 4 அமைந்தது. அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.

அதனால் அரண்மனை 4 – ம் பாகத்தில் வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்டார்.

அதனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் 5 – ம் பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அரண்மனை 5 குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, அரண்மனை 5 படத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் எனவும் தகவல் வெளியானது.

தற்போது, அரண்மனை 5 குறித்து வெளியான தகவல் பொய்யானது என கூறி நடிகை குஷ்பு சுந்தர் அவரது இன்ஸ்டா பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரண்மனை 5 படம் குறித்து பொய்யான தகவல் பரவி வருகிறது அதிகாரப்பூர்வ தகவல் இயக்குனர் மூலம் அல்லது தயாரிப்பாளர் மூலம் தான் வெளிவரும் அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.