இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது அடுத்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழர் தரப்பிலும் மற்றும் தென்னிலங்கை தரப்பிலும் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியல் என்ற பின் கதவால் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துகொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
இதில் முக்கிய பங்காளராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) தெரிவிக்கலாம்.
காரணம், அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர்.
இந்தநிலையில், அரசியலில் இவ்வாறு தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர், தனது தோல்வி குறித்த அச்சத்தினால் தமிழரசுக்கட்சியில் தந்திரமாக காய் நகர்த்தும் சுமந்திரனை (M. A. Sumanthiran) போலவே தேசிய பட்டியல் எனும் பின் கதவில் கைவைத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியை பொருத்தவரையில் தேசிய பட்டியலில் ஒருவருக்கு மாத்திரமே இடம் கிடைக்க கூடும் என்ற நட்பாசை இருந்தாலும் அந்த ஒருவராக தானே இருக்க வேண்டும் என்ற கணிப்பில் சுமந்திரன் சில வியூகங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
இந்தநிலையில், சுமந்திரனை போல தந்திரமாக நாமல் செயற்ப்பட்டாலும் நாமலுக்கு கிடைக்கும் வாய்ப்பு சுமந்திரனுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குரியே.
Comments are closed.