புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவின் புதிய நகர்வுகள் தற்போது பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவு சர்வதேசத்தின் ஆடுகளமாக மாறியுள்ளமை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது தென் ஆசிய பிராந்தியத்தின் பூகோள அரசியல் கொதிநிலையில் உள்ள நிலையில், தற்போது அநுரகுமாரவின் வெற்றி அதிக கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவிற்கு இவை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதன் காரணமாக இலங்கையை தம்வசம்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதுடன், இந்தியா அயல் நாடுகளை தன்வசம்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளது.
மேலும், இந்தியா தற்போது சிங்கள மக்களை தம் பக்கம் திருப்ப தமிழ் மக்களை கவனிக்காத நிலையில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.