தென்னிந்திய மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தல்

11

தென்னிந்தியாவில் மக்கள்தொகைப் போக்குகள் மற்றும் அதன் அரசியல் விளைவுகள் என்பன புதிய விவாதங்களை தூண்டியுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

இந்தநிலையில், மக்கள் தொகையின் வீழ்ச்சி விளைவுகளை எதிர்கொள்ள குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதை அடுத்து இந்த விவாதம் தீவிரமாகியுள்ளது.

மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அடிப்படையிலேயே இந்த விடயம் மேலோங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, இன்று சென்னையில் நடத்திய வெகுஜன திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், திருமண ஆசீர்வாதங்கள் குறித்து கருத்துரைத்தார்.

குறைந்த மக்கள்தொகை காரணமாக, நாடாளுமன்ற இடங்கள் குறைக்கப்படுவதால், புதுமணத் தம்பதிகள் 16 குழந்தைகளை இலக்காகக் கொள்ளலாம் என்று நகைச்சுவையுடன் பரிந்துரைத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆந்திரப் பிரதேசத்தின் வயதான மக்களால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்துரைத்திருந்தார்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை மாற்றியமைத்து, அதிக குழந்தைகளைப் பெற குடும்பங்களை ஊக்குவிக்கும் சட்டத்தை தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம், 1.6, தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பிராந்தியத்தில் வளர்ந்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து கவலை வெளியிட்ட அவர், ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தென்னிந்தியாவில் வயதான மக்கள் இளைஞர்களை விட அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.  

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வரவிருக்கும் எல்லை நிர்ணய செயல்முறை, மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு தொகுதி எல்லைகளை சரிசெய்தால், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே 2019 சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான அழைப்பை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

மக்கள்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்த மோடி, இது எதிர்கால சந்ததியினருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குழந்தைகளின் எண்ணிக்கையை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தும் குடும்பங்களை அவர் பாராட்டினார், இது ஒரு தேசபக்தியின் செயல் என்று விவரித்தார், மேலும் இந்த பிரச்சினையில் அதிக விழிப்புணர்வு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

Comments are closed.