ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம்

7

ஈரானுக்கு எதிராக பழிவாங்கும் இஸ்ரேலின் திட்டங்களைப் பற்றிய மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 15 மற்றும் 16 திகதியிடப்பட்ட ஆவணங்கள், “மிடில் ஈஸ்ட் ஸ்பெக்டேட்டர்” என்ற கணக்கு மூலம் டெலிகிராமில் வெளியிடப்பட்ட பின்னர் அவை இணையத்தில் கசிய ஆரம்பித்துள்ளன.

இவை மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும், அவை அமெரிக்கா மற்றும் அதன் “ஐந்து கண்கள்” எனப்படும் பங்காளி நாடுகளான அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றால் மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் அடையாளங்களைக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு இஸ்ரேல் செய்யவுள்ள திட்டங்களை ஆவணங்கள் விவரிக்கின்றன.

நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டலிஜென்ஸ் ஏஜென்சியால் தொகுக்கப்பட்டதாகக் கூறும் ஆவணங்களில் ஒன்று, இந்தத் திட்டங்களில் இஸ்ரேல் ஆயுதங்களை நகர்த்துவதை உள்ளடக்கியது என்று கூறுகிறது.

மற்றொரு ஆவணம் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பாக நம்பப்படும் வான்வெளி ஏவுகணைகளை உள்ளடக்கிய இஸ்ரேலிய விமானப்படை பயிற்சிகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் கூறுகிறது.

இந்த கசிவு ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானைத் தாக்கத் தயாராகி வரும் இஸ்ரேலியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது .

“ஒக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய தந்திரோபாய திட்டங்கள் கசிந்திருப்பது உண்மையாக இருந்தால், அது ஒரு தீவிரமான மீறலாகும்” என்று மத்திய கிழக்கிற்கான முன்னாள் துணை பாதுகாப்பு செயலாளரும் ஓய்வு பெற்ற CIA அதிகாரியுமான Mick Mulroy கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.