பொதுதேர்தல் களத்திற்கு தயாராகும் திசைக்காட்டி: அநுர தலைமையில் வெற்றி பொதுகூட்டம்

7

தேசிய மக்கள் சக்தியின் “நாட்டை ஒன்றாக கட்டியெழுப்புவோம் – நாம் திசைாகாட்டிக்காக” என்னும் தொனிபொருளிலான ஆரம்ப வெற்றிப் பொதுக்கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, ஹோமாகமவில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த ஆரம்ப வெற்றிப் பொதுக்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பிலான பதிவினை இட்டு “உங்கள் தளராத ஆதரவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Comments are closed.