தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இளம் ஜோடிகளுக்கு போட்டியாக வலம் வருபவர் த்ரிஷா. 41 வயதிலும் பிஸியான நடிகையாக இருக்கும் இவர் கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
கில்லி, மங்காத்தா, 96 போன்ற நல்ல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென பல ரசிகர்களை சம்பாதித்தார். அதை தொடர்ந்து வெளிவந்த கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
மேலும் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரை தமிழ் சினிமாவில் பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க முடியாது.
அந்த அளவிற்கு பல கோடி ரசிகர்களை அவரது நடிப்பு மற்றும் இளமை மூலம் சம்பாதித்தார். அந்த அளவிற்கு பெரிய நடிகையாக வலம் வரும் இவருக்கு பிடித்த நடிகைகள் யார் தெரியுமா. இதுகுறித்து, பேட்டி ஒன்றில் அவர் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “அனுஷ்கா, நித்யா மேனன், இவானா, சாய் பல்லவி ஆகிய நடிகைகளை மிகவும் எனக்கு பிடிக்கும். அவர்கள் நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை” என்று கூறியுள்ளார்.
Comments are closed.