இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு

9

இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச பொலிஸாரின் சைபர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

அண்மையில் கைது செய்யப்பட்ட 218 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகளைத் தவிர, சுமார் 300 பேர் நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் இலங்கை மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து மோசடியான முறையில் பாரிய அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.