பிக் பாஸ் 8 இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. ஒரே பெண்ணை குறி வைத்த ஆண் போட்டியாளர்கள்

11

பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது இரண்டாவது வாரத்தில் நுழைந்து இருக்கிறது. முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆன நிலையில், மீண்டும் ஆண்கள் vs பெண்கள் என பழையபடி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஆண்கள் vs பெண்கள் மாற்றி மாற்றி நாமினேட் செய்யவேண்டும் என சொல்லப்பட்டது.

இந்த வாரம் சவுந்தர்யாவை குறிவைக்க வேண்டும் என மொத்த ஆண் போட்டியாளர்களும் முடிவு செய்தனர். அதன்படி சவுந்தர்யாவுக்கு மட்டும் 7 வாக்குகள் நாமினேஷனில் பதிவானது.

தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் நேரடி நாமினேஷனில் தேர்வானார்கள். அதன் பின் பிக் பாஸ் மொத்த நாமினேஷன் லிஸ்ட்டை அறிவிக்கும்போது அதில் மொத்தம் 10 போட்டியாளர்கள் பெயர்கள் இருந்தது.

சவுந்தர்யா – 7
ரஞ்சித் – 5
ஜெப்ரி – 3
முத்துகுமரன் – 3
அர்னாவ் – 2
விஷால் -2
தர்ஷா -2
சாச்சனா – 2
தீபக் – நேரடி நாமினேஷன்
ஜாக்குலின் – நேரடி நாமினேஷன்  

Comments are closed.