வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம்

8

இலங்கையின் புதிய அரசாங்கம், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளது.

வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொழும்பில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்த விளக்கத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கியுள்ளார்.

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தலின் பின்னரே, அரசாங்கம் இருதரப்பு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் ஒரு புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்திற்கான ஆணையை வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Comments are closed.