இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்

6

இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அபாயங்களை குறைப்பதாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தமை, 2024 செப்டம்பரில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்த இணங்கியமை என்பனவே, கடன் மறுசீரமைப்பு செயல்துறையின் அபாயங்களை குறைப்பதாக பிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திநாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, இலங்கை தொடர்பான கொள்கையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை தாமதப்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கூறுகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் அபாயத்தை அது, எழுப்பியிருந்தது.

எவ்வாறாயினும்,முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைளுக்கு புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என்று பிட்ச் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் மொத்த பொது அரச கடன் விகிதம் 2022 இல் சுமார் 116வீதத்தில் இருந்து 2028 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 103வீதமாக படிப்படியாக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

Comments are closed.