கன்பெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க.. நான் போறேன்! கதறி அழுத பவித்ரா.. இது தான் காரணம்

12

பிக் பாஸ் 8வது சீசனில் இன்று ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சண்டை போடுவது போல செய்த பிராங்க் தான் பெரிய பிரச்னையை கொண்டு வந்திருக்கிறது.

சண்டை போட்டு, அடிதடி செய்வது போல காட்டிவிட்டு எல்லோரும் அதிர்ச்சியாக இருக்கும்போது அது prank என சொல்லி ஷாக் கொடுத்தார்.

ஆண்கள் டீமுக்கு அனுப்பப்பட்ட பவித்ரா இதை பற்றி ஏன் முன்பே எங்களிடம் சொல்லவில்லை என பெண்கள் டீமில் அவரிடம் சண்டை போட்டனர்.

அதன் பிறகு தர்ஷா குப்தா பவித்ராவிடம் சண்டை போட்டார். “எனக்கு பதிலாக நீங்க போனீங்க, நான் போயிருந்தால் எதாவது செய்திருப்பேன்” என கூறி அவர் கத்தினார்.

இதை கேட்டு பவித்ரா அழ தொடங்கிவிட்டார். அதன் பிறகு கன்பெக்ஷன் ரூமுக்கு செல்லவேண்டும் என சொல்லி கதறி அழ தொடங்கினார்.  

Comments are closed.