சிக்கப்போகும் கடந்த அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள்: அநுர தரப்பினர் அதிரடி நகர்வு

8

நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பிற்கு அதனை வழங்குமாறு அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 24 ஆம் திகதி மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து மக்கள் எதிர்பார்த்தவாறு நிதி முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைபடுத்த ஆரம்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தி திருடர்களுடன் எப்போதும் டீல் பேசாது என்றும் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் மிகவும் முக்கியமானவை எனவும், அந்தத் தகவல்களின் மூலம் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத வேலைகளைச் செய்த நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வாறு சட்டம் நடைமுறைப்படுகிறது என்பதை பொதுமக்கள் அவதானிக்க முடியும் எனவும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்களே தமக்கு எதிராக சட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்துமாறு கோரி வருவதாகவும், அவசரப்படாமல் ஆதாரங்களுடன் தகவல்களைப் பெற்ற பின்னரே இதனைச் செய்ய வேண்டுமென்பதனால் முறையாகச் செய்வதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.