கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு பொலிஸார் அழைப்பாணை

9

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நுகேகொடை பெங்கிரிவத்த அருகே அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தினருகே பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

இதன்போது சிவில் உடையில் இருந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளது

அது தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்வதற்காகவே கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Comments are closed.