இஸ்ரேலில் தவறான முடிவெடுத்து இலங்கையர் ஒருவர் உயிர்மாய்ப்பு

7

இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தூதுவர் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் ஆறு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் விவசாயத் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சடலத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.