எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இணைந்து கொள்ளும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணங்கியதன் அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியாக போட்டியிட்டது போன்று அடுத்த பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.