அவசர அவரசமாக பதவி விலகிய பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளார்

13

இலங்கை பெட்ரொலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளார் சாலிய விக்ரமசூரிய தனது பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தவிசாளர் பதவிகளில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அவர் தனது பதவில் விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான சபையொன்றை நியமிப்பதற்கு சுதந்திரம் வழங்குவதற்காக அவர் தனது பதவிகளை விட்டு விலகுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.