நினைத்தது நடக்கவில்லை – ரணில் கவலை

11

பொதுஜன பெரமுன சார்பில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பு, மலர் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்த போது மக்கள் அவர்களுடன் வரவில்லை எனத் தோன்றுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 பெரும்பான்மையான மக்கள் அனுர திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.