அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ள செய்தி

9

இலங்கையை, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்ல, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச பத்திரதாரர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கொள்கை அடிப்படையில், ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அறிவிப்பை வரவேற்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.