இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் அநுர முதலிடம்

6

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அநுர முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனப்படையில், 50 சதவீத வாக்குகள் பெறமுடியாமையால் விருப்பு வாக்கு எண்ணப்பட்டு வருகின்றது.

மேலும் முதலில் வெளியான தேர்தல்களின் அடிப்படையில் அனுர குமார திசாநாயக்க முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குக்களை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குக்களை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,363,035 வாக்குக்களை பெற்றுள்ளார்.

Comments are closed.