ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.
மேலும், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் கலப்பட பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், தங்களுடைய ஆட்சி வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதங்கள் தயாரித்து வருவதாகவும், கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வாங்கி தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
Comments are closed.