பிரித்தானியா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

7

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வேறு நாட்டு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய வங்கிக்கணக்கு தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்காக பிரித்தானியாவிற்கு செல்லும் மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

தற்போது இந்தத்தொகை எதிர்வரும் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, லண்டனில் கல்வி பயிலவிருக்கும் சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் 1,483 பவுண்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன், வேறு நகரங்களில் கல்வி பயிலவிருக்கும் சர்வதேச மாணவர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் 1,136 பவுண்டுகள் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

இதேவேளை, இந்த தொகை லண்டனில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 1, 334 பவுண்டுகளாகவும், லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு 1, 023 பவுண்டுகளாகவும் தற்போது உள்ளன.

Comments are closed.