நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

11

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டன.  

Comments are closed.