ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

12

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கை அலுவலகங்களில் அறிக்கைகள் பெற்று அவசியமான பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அல்லது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் கடைசி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், அந்த இடங்கள் தொடர்பில் உளவுத்துறை அறிக்கைகள் பெறப்படும்.

கூட்டத்திற்கு சில மணி நேரம் முன்னதாக, தேவையான பாதுகாப்பை அளித்து கூட்டம் முடிந்த பின் அறிக்கைகள் பெறப்படும்.

Comments are closed.