தமிழ்நாட்டில் மட்டுமே GOAT இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? எவ்வளவு தெரியுமா

8

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் GOAT. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்த GOAT படத்தின் வசூல் தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 145 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

GOAT படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 69, விஜய்யின் கடைசி படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இதற்கான விஜய் ரசிகர்களுக்கும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Comments are closed.