இயக்குனர் மகேஷ் பட்டின் மகளாக சினிமாவில் நுழைந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நட்சத்திரக் குழந்தைகள் என்பதால் பல சலுகைகள் சினிமாவில் கொடுக்கப்படும் நிலையில், தனது உழைப்பாலும், நடிப்பின் மேல் கொண்ட அன்பாலும் இன்று பாலிவுட் சினிமாவில் ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
கரண் ஜோகரின் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து நல்ல நடிகை என்ற பாராட்டை பெற்று பல விருதுகளை வென்றுள்ளார்.
ஆனால், ஒரு நட்சத்திரக் குழந்தையாக இருந்தாலும் இவர் 12 -ஆம் வகுப்பை கூட முடிக்கவில்லை. தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமா மேல் உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்துவிட்டார். தொடர்ந்து, பட வாய்ப்புகள் கிடைத்ததால் மற்ற நட்சத்திரங்கள் போல இல்லாமல் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை தற்போது, பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட் தான்.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார். விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இன்று சினிமாவில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.