ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து தளபதி 69, அதாவது விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69 படத்தின் அறிவிப்பும் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருகிறது. இப்படத்தை தயாரிக்க கே வி என் நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.
மேலும் இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹெச். வினோத் இயக்கவுள்ளாராம். விஜய்யுடன் இயக்குனர் ஹெச். வினோத் இணைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்க்கும் – சங்கீதாவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் பைக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments are closed.