தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து தகவல் தான்.
சில மாதங்களாக இந்த ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல் பரவியது.
ஜெயம் ரவி இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து குறித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று இது குறித்து ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டார்.
ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்ததாகவும், இதுகுறித்து தன்னிடம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் இணையத்தில் ஒருமுறை பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
அதில், எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கை இல்லை, நான் சரியான நபரை சந்திக்கும்வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்காக நான் காத்திருக்க தயாராக உள்ளேன்.
அவ்வாறு எனக்கு சரியான நபர் கிடைக்காமல் திருமணம் நடைபெறாமல் இருந்தால் கூட பரவா இல்லை அதை பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன்.
தவறான மனிதர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக அந்த பந்தத்தில் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன், அதனால் நான் சரியான நபர் வரும் வரை காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
Comments are closed.