செப்டம்பர் 18ம் திகதி பிரசார நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவுக்குப் பின்னர், எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை, தேசிய மக்கள் சக்தியினராக காட்டிக்கொண்டு வன்முறைச் சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் வன்முறைச் சம்பவங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையிலேயே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கூறுபவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்புப் தரப்பினரிடம் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் 18க்கு பிறகு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றி பேச ஊடக நிறுவனங்களும் சிரமப்படுகின்றன.
இதன்போதே சதிகாரர்கள், தேசிய மக்கள் சக்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கலாம் என்று ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தாக்குதலை உருவாக்கியவர்களுக்கு இது பெரிய விடயமல்ல என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Comments are closed.