திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்: கைது செய்ய நடவடிக்கை

12

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் Pre-shoot புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ஹெவிசி மண்டபம், அம்பராவ உள்ளிட்ட பல இடங்களில் இருந்து இந்த புகைப்படங்களை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தலதா மாளிகையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தம்பதியினரையும் புகைப்படக் கலைஞர்களையும் கண்டிக்கு இன்றைய தினம் வரவழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த புகைப்படம் எடுத்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Comments are closed.