நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஈடுபாடு தொடர்பான அண்மைய தவறான கருத்துக்களை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு பற்றிய தெளிவுபடுத்தல்கள்” என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டை எதிர்க்கும் உரிமை உள்ளது என்பதை, இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
எனினும், அத்தகைய சூழ்நிலையில் ஏற்படும் முட்டுக்கட்டை, நிதியளிப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை பல மாதங்களுக்கு தாமதப்படுத்தும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை தனது சொந்த கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வைத் தயாரிக்கத் தவறிவிட்டது என்ற கூற்றுக்களை அமைச்சகம் மறுத்துள்ளது
Comments are closed.