தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத்தேர்தல் நடைபெறும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியல் சாசனத்தின்படி, தமது கட்சி நாட்டை ஆட்சி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் பொதுத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அநுரகுமார, தமது வெற்றி குறித்து எதிர்க் கட்சியினர் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது தமது தோல்வியை எவ்வாறு தவிர்ப்பது குறித்து அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments are closed.