மக்களை முட்டாளாக்கும் அநுரவின் விஞ்ஞாபனம்! கடும் அதிருப்தியை வெளியிட்ட ரணில்

7

“மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி நாட்டை ஏமாற்றிய போதிலும், அவர்களின் 232 பக்க விஞ்ஞாபனத்தில் மாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெற்று மாற்றம். ஒட்டுமொத்தத்தில் அநுரவின் தேர்தல் விஞ்ஞாபம் மக்களை முட்டாளாக்குகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்துக்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்காக ஒன்றுபடுகையில் கோஷமிடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ஜீ.எல். பீரிஸ், நாலக கொடஹேவா மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Comments are closed.