தேசிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை அளிக்காது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த காலங்களில் கூட தமது கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்தது கிடையாது என கூறியுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செய்யக்கூடியவற்றை மட்டுமே உறுதி மொழிகளாக வழங்குவதாகவும் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் பற்றி மட்டுமே பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும், தோல்வியடைந்த கட்சியை, தோல்வியடைந்த அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
Comments are closed.