தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் என ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.