2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புது புது அறிவிப்புக்களும், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும், அடுத்த ஜனாதிபதிக்கான தமது ஆதரவு தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடுகளும் நாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவிப்பதாகவே அமைகின்றன.
இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்த பல வருடங்களுக்கான இலங்கையின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக அமையும் அதேவேளை தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கருதப்படும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களின் தீர்மானம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதில் முக்கியமாக பார்க்கப்படுவது ஒரு கட்சியின் தீர்மானம் அந்த கட்சியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்து.
தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கான மூல கர்த்தா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் என்பது பலர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு.
இந்நிலையில் சுமந்திரனின் நகர்வுகள் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு என அறிவித்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments are closed.